யாழில் சமையல் ஏரிவாயு இன்றி அல்லல் படும் மக்கள் !

பல நாட்களாக சமையல் எரிவாயு கிடைக்காமல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக யாழ். மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக யாழ். மக்கள் தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு ஏற்றிய லொறி வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.எரிவாயு வந்த பிறகும், எரிவாயு வாங்க மக்கள் கடுமையாகப் போராட வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, எரிவாயு விற்பனை நிலையத்துக்கு முன்னால் யாழ். மக்கள் சிலிண்டருடன் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.