ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் இறங்குவோருக்கு எச்சரிக்கை!

அங்கீகாரம் வழங்கப்பட்டவா்களைத் தவிர ஊரடங்கு சட்ட உத்தரவை மீறி வீதிகளில் இறங்குவோர் கைது செய்யப்படுவார்கள் என இன்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதான வீதிகளிலோ அல்லது உள் வீதிகளிலோ எவரும் இறங்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உத்தரவை மீறி வீதிகளில் இறங்குவோர் கைது செய்யப்பட்டால் அவர்களுக்குப் பொலிஸ்பிணை வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.