இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 9 பேர் பலி!

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதில் கிட்டத்தட்ட 25 மாவட்டங்களில் கொட்டிய கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி ஆறு உள்ள நீர்நிலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொழும்பு, வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.