பெருமளவு பயணிகளுடன் சுகாதார விதிமுறைகளுக்கு முரணாகப் பயணித்த பேரூந்து பொலிஸாரிடம் சிக்கியது..!! சாரதியும் நடத்துனரும் கைது.!!

கொரோனா தடுப்பு சுகாதார விதிகளுக்கு முரணாக அதிகளவு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து தெரிய வருவதாவது;

இராணுவத்தினரும் பொலிஸாரும் கொரோனா ஒழிப்புக்கான கடமையில் ஈடுபட்டிருந்த வேளை,வாழைச்சேனை – அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தில் 61 பேர் பயணம் செய்துள்ளனர்.பேருந்தில் பயணித்த முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கொரோனா தடுப்பு சுகாதார விதிகளுக்கு முரணாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பேருந்தின் சாரதியும் நடாத்துனரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.