புத்தளம் மாவட்டத்தில் புதையல் தோண்டிய மூவர் கைது

புத்தளம் மாவட்டம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன்வௌ, பங்கதெனிய பிரதேசத்தில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூவரைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ, சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15, 30, 35 வயதுகளையுடைய மூவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.