ரவுட்டருக்கு மின்னிணைப்புக்கு முற்பட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

வீட்டு இணைய பாவனைக்கு பயன்படுத்தும் ரவுட்டருக்கு மின்னிணைப்புக்கு முற்பட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது பதுளை, லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகொல்ல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லுனுகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 16 வயது மாணவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மின்சாரமா தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் லுனுகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லுனுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.