தென்னை மரத்தில் கசிப்பு!! தேடிப் பிடித்து வளைத்த கோப்பாய் பொலிஸார்..!

உரும்பிராய் கிழக்கில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர். நூதனமான முறையில் தென்னை மரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பும் கைப்பற்றப்பட்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். உரும்பிராய் கிழக்கில் கசிப்புக் காய்ச்சப்படுகின்றது என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் நேற்று (வைகாசி 10) மாலை அந்தப் பகுதியில் தேடுதல் மேற்கொண்டனர்.சந்தேகத்துக்குரிய வீடொன்றைக் காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த வீட்டின் வளவில் பல குழிகள் இருந்தமைக்கான அடையாளங்கள் தென்பட்டன. காவல்துறையினர் அந்த இடங்களைத் அகழ்ந்தபோதும் அவற்றுள் எவையும் இருக்கவில்லை.அந்த வீட்டின் வளவுக்குள் தொடர் தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர், தென்னை மரத்தில் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பைக் கண்டுபிடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.