நாட்டு சர்க்கரையில் இவ்வளவு நன்மைகளா! வாங்க பார்க்கலாம்

பொதுவாக உடலின் உள்ளுறுப்புகள் சீராக இயங்குவதற்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும். ஆனால் தீங்கான ரசாயனகளை கொண்ட வெள்ளை சர்க்கரையையே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதனால் உடலிற்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம். நாட்டு சர்க்கரையில் பல சத்துகள் உள்ளன.

இவற்றில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் ஜின்க் செலினியம் இரும்புசத்து போன்ற சத்துக்கள் நாட்டு சர்க்கரையில் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது.

தற்போது நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்கள் என்றால் வெதுவெதுப்பான நீரில் இஞ்சி மற்றும் ஒரு டீ ஸ்பூன் பிரவுன் சர்க்கரையை கலந்து குடிக்கலாம். இது உடனடியாக மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது. மேலும், மலச்சிக்கலால் வயிற்றில் தேங்கியிருக்கும் தேவையற்ற காற்றை வெளியேற்றவும் உதவியாக இருக்கும்.
  •   பிரவுன் சர்க்கரையை சாப்பிடலாம். இதில், கலோரியின் அளவு மிக குறைவாக இருப்பதுடன், உங்களின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கும் உதவியாக இருக்கும். குறிப்பாக எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு பிரவுன் சுகர் கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.
  •  கடுமையான தசைப் பிடிப்புகளால் வலியை அதிகமாக இருந்தால் பிரவுன் சுகரை எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் பொட்டாசியம் கால் மற்றும் கைகளில் உள்ள தசைகளில் ஏற்படும் பிடிப்புகளை சரி செய்யும்.
  • பிரவுன் சுகரின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. இதனால், உடலில் இருக்கும் பாக்டீரியா தொற்றுகள், அழற்சி பண்புகளுக்கு எதிராக போராட உதவுகிறது.
  •  பிரவுன் சுகரில் ஆன்டி அலர்ஜிக் கூறுகள் அதிகளவில் இருப்பதால் ஆஸ்துமா நோயாளிகளின் சிகிச்சைக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் ஆஸ்துமா தீவிரத்தில் இருந்து குறைந்து, இயல்பான சுவாச நிலையை அடைவதற்கு பயன்படுகிறது.