நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி….கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்வு..!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மொத்தமாக 343 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை நாட்டில் இதுவரை 863 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசலைகளில் 511 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.