சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 51 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

பண்டாரவளை பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 51 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 11 பேர் சிறுவர்கள் என்றும் ஏனையோர் அங்கு பணிபுரிபவர்கள் என்றும் பண்டாரவளை சுகாதார மருத்துவ அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பண்டாரவளை ‘சுஜாதா செவன’ சிறுவர் பராமரிப்பு இல்லத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

முதலில் அங்கு பணிபுரிபவர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் உட்பட ஏனையோருக்கு மேற்கொண்ட என்ரிஜன் பரிசோதனை மூலமே அவர்களுக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.