மின்சாரம் தாக்கி யாழ் குடும்பஸ்தர் ஒருவர் பலி!

யாழ்., வடமராட்சி, கரவெட்டியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் துன்னாலை, ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது – 33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

கரவெட்டி வடக்கிலுள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்த போது தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குடுமபஸ்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.