உலகத்தையே வியப்பில் ஆழ்த்தி கொரோனாவின் பிடியில் சிக்காமல் தப்பித்த நாடுகள்.!!

கொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றன.


வடக்கு பசிபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை மக்கள் தொகையாக கண்ட சின்னஞ்சிறு தேசம் பலாவ் தீவுகள் குடியரசு. இந்த தேசத்தில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.இத்தனைக்கும் பசிபிக் பிராந்திய நாடுகள் பலவரும் கொரோனாவின் கொடூர தாக்கத்தில் சிக்கி இருக்கின்றன. இதேபோல் சுமார் 1 லட்சம் பேரை மக்கள் தொகையாக கண்ட குட்டிநாடான டோங்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை.மேலும் சாலமன் தீவுகள், மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா தாக்காத தேசங்களாகும். அதேநேரத்தில் பசிபிக் கடலில் உள்ள வடக்கு மரியானா தீவுகள் நாடுகளில் முதலாவது கொரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவைதவிர அண்டார்டிகா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது