தினை அரிசி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா? வாங்க பார்க்கலாம்

பொதுவாகவே ஆசிய மக்களின் பிரதான உணவு நெல்லரிசி சோறாகவே உள்ளது. தற்கால நவீன யுகத்தில் பலரும் நவதானிய அரிசிகளை உண்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளது.

ஆனால் இன்றும்கூட சில கிராமப்புறங்களில் தினை அரிசி சாப்பிடுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். தினை அரிசியானது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகின்றது.

தினை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும். தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.

இதனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்களை எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

மேலும் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதில் அதிகம் நிறைந்துள்ளது. நெல் அரிசியை காட்டிலும் தினை அரிசியில் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவாக நீங்கள் தினை அரிசியினை உண்டு வரும்பொழுது ஒரு நாளிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடும்.

தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இதனை உண்டு வரும்பொழுது அதற்கான பலனை நீங்கள் பெறலாம்.

மேலும் தினை அரிசியில் சோறு, இட்லி, தோசை,பொங்கல்,  கஞ்சி என்பவற்றினையும்  சமைத்து உண்ணலாம்.