அனைத்து அரச, தனியார் அலுவலர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்…!!

அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.தளர்த்தப்பட்ட ஊரடங்கு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த அவர்,

அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் உத்தியோகத்தர்களுக்கு சில அறிவுரைகளை தெளிவுபடுத்த வேண்டி இருக்கின்றது.காய்ச்சல், தடிமல், இருமல், தொண்டை வலி அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்கள் கடமைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வீட்டிலேயே இருந்து மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை முறைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.கடமைக்கு செல்பவர்கள் கட்டாயமாக முகக் கவசத்தை அணிந்து செல்லுங்கள்.கடமையாற்றும் நிறுவனத்தின் முன்பகுதியில் தொற்று நீக்கக்கூடிய பொறி முறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.அலுவலகங்களின் வாயில்களில் உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய கருவிகள் இருக்குமாயின் மிகவும் விரும்பத்தக்கது.தங்களது வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது.அதே போன்று கைரேகை பதிவேட்டை மேற்கொள்ள முன்னரும், கைரேகை பதிவேட்டை பதிவு செய்த பின்னரும் கைகளை நன்றாக தொற்று நீக்கிக் கொள்ளுங்கள்.பல மாதங்களின் பின்னர் கடமைக்கு திரும்பும் இச்சந்தர்ப்பத்தில் நண்பர்களை, சக உத்தியோகத்தர்களை காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களிடம் கை கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தி விடவேண்டும்.சக உத்தியோகத்தர்களை தொடுவதோ அவர்களது உபகரணங்களை பாவிப்பதோ அருகில் செல்வதோ தவிர்க்கப்படவேண்டும். இவ்வாறு சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.