கொழும்பில் இருந்து யாழ் வந்த இரு சொகுசு கார்களில் ஆபத்தான பொருட்கள்: யாழ்.பொலிஸார் அதிரடி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டதாக கூறப்படும் போதை மாத்திரைகளை யாழ்.பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு சொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அடையாளம் காணப்பட்ட இரு கார்களை கைப்பற்றியுள்ள பொலிஸார் அதிலிருந்து போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்.நகரை சேர்ந்த ஒருவரையும், கொழும்பை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.