நாட்டில் மரக்கறி விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் கொழும்பு நகர எல்லையில் உள்ள சுப்பர் மார்க்கெட்களில் மரக்கறி விலைகள் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய போஞ்சி ஒரு கிலோ கிராம் 350 ரூபாயிலும், கரட் ஒரு கிலோ கிராம் 280 ரூபாயிலும் லீக்ஸ் ஒரு கிலோ கிராம் 340 ரூபாய் வரையிலும் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பொதுவான நாட்களில் சுப்பர் மார்க்கெட்களில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஈர பிலாக்காய் ஒன்று தற்போது 200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மரக்கறி சந்தையில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் அதிகரிப்பதன் காரணமாக சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளதாக நாடளாவிய ரீதியில் உள்ள மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.