தாயை உயிருடன் புதைத்த கொடூர இளைஞன்..!! மூன்று நாட்களில் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்.!

சீனாவில் உள்ள வடக்குபகுதியில் இருக்கும் சிம்பியன் நகரில், கடந்த 2ஆம் திகதி, நபர் ஒருவர் தனது தாயை கை வண்டி ஒன்றில் வைத்து தள்ளிச் சென்றுள்ளார்.

பின்னர் சுமார் மூன்று நாட்களாகியும் மாமியார் வீட்டுக்கு திரும்பாததால் குறித்த நபரின் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து தனது கணவரிடம் இது குறித்து கேட்ட சமயத்தில் பதில் கிடைக்காததால், அங்குள்ள காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார்.விசாரணையில், குழியில் மூன்று நாட்களுக்கு முன் வயதான பெண்மணியை குறித்த நபர் உயிருடன் புதைத்த விடயம் தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் பெண்ணை உயிருடன் மீட்டுள்ளனர்.மேலும், தனது தாயை பராமரிக்க இயலாமல், குறித்த நபர் உயிருடன் மண்ணில் புதைத்தது தெரியவந்துள்ளது.