பூப்புனித நீராட்டு விழா நடந்த வீட்டில் வயோதிப பெண் கொரோனா தொற்றால் மரணம்..!

கொரோனா தொற்றினால் யாழ்.தென்மராட்சியில் 78 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். கடந்த வாரம் கொடிகாமத்தில் உள்ள தனது வீட்டில் பேத்திக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தியிருந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தவர்கள், உணவு சமைத்தவர்கள் என பலர் சுகாதார பிரிவினால் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.