திட்டமிட்டு நடத்தப்படும் விபத்துக்கள் ! வாகன சாரதிகளின் கவனத்திட்கு

இலங்கையின் பல பகுதிகளில் வாகன விபத்துக்களை ஏற்படுத்தி, அதில் சிக்கும் நபர்களை அச்சிறுத்தி கப்பமாக பணம் பெறும் கும்பல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கம்பஹா பொலிஸ் தலைமையகத்தினால் பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய தெளிவுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட கும்பல் ஒன்று வீதியில் பயணிக்கும் வாகனங்களுடன் வேண்டுமென்றே மோதுண்டு விபத்தை ஏற்படுத்துகின்றனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி, பொலிஸ் நிலையம் செல்வதை தவிர்ப்பதற்காக பணம் தருமாறு அச்சுறுத்துவதாக தெரிய வந்துள்ளது.
அவ்வாறு திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே வாகன விபத்துக்களை யாரால் ஏற்படுத்தினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.