பாடசாலைகளின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள முக்கிய அறிக்கை..!

மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவதற்கான வேலைத்திட்டம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டாலும், பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், சர்வதேச ரீதியில் இலங்கை முன்னிலையில் இருப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையினர், முப்படையினர், காவல்துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இதற்காக இதுவரையில் ஆற்றிய சேவை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.இதேவேளை, அவசியம் ஏற்படின், முன்னர் போல ஏதாவது ஒரு பிரதேசத்தை முடக்குதல் மற்றும் காவல்துறை அதிகார பிரிவுக்குள் ஊரடங்கு சட்டத்தை அமுலாக்கல் போன்ற நடைமுறைகளை செயற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.