நாட்டில் வாகன விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையின் சந்தையில் அதிகரித்து வந்த வாகனங்களின் விலை தற்போது ஓரளவு குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாகனங்கள் நிலையான விலையில் இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வாகன உதிரிபாகங்களின் விலைகள் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டொலரின் பெறுமதி உள்ளிட்ட சந்தை நிலவரங்கள் காரணமாக வாகன உதிரி பாகங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் சந்தையில் வாகனங்களின் விலைகள் ஸ்திரமாகியுள்ளதாகவும், இது சாதகமான முன்னேற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.