இந்த ராசிப் பெண்களை திருமணம் செய்து கொள்பவர்கள் ரொம்ப அதிர்ஷ்டக்காரர்கள்! வாங்க யார்னு பார்ப்போம்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

அப்படி இருக்க தனக்கு வரும் மனைவி அழகாக இருக்க வேண்டும், இல்வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்று தான் எல்லாஆண்களும் விரும்புவார்கள்

மேலும் அன்பு, காதல், பாசம், அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு என ஆயுள் முழுவதும் உறுதுணையாக நிற்கும் துணைவியை அவர்களது ராசியைப் பொறுத்து தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை இன்பமாக அமையும் என்பது நம்பிக்கை.

அத்தகைய நல்வாழ்விற்கு சில ராசிகளை கொண்ட பெண்களே சிறந்தவர்கள் என ஜோதிடம் கூறுகிறது. அதன்படி, இந்த 3 ராசிக்கார பெண்கள் எந்த ராசியை சேர்ந்த ஆண்களாக இருந்தாலும், அவர்களது வளமான வாழ்விற்கு ஒளி சேர்ப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.

மேஷம் :

செவ்வாய் கிரகத்தால் ஆட்சி செய்யப்படும் ராசி தான் மேஷம். ஆற்றல் திறன் மற்றும் சுறுசுறுப்பு நிறைந்தவர்களாக இருக்கும் மேஷ ராசிக்கார பெண்கள், வசீகரம் மற்றும் அன்பால் அனைவரையும் எளிதில் கவரக் கூடியவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்கார பெண்கள் அவர்களுக்கு நிகரான ஆண்மகனையே தேர்வு செய்வார்கள். ஒருபோதும் கணவனை விட்டுக் கொடுக்காமல், பொது வாழ்வு, இல்வாழ்வு இரண்டையும் ஒருசேர வழிநடுத்துவார்கள். சாகும் வரை கணவனை கண்ணில் சுமந்து வாழ்வார்கள்.

கடகம் :

குடும்பத்தின் மீது அன்பு கொண்ட கடக ராசி பெண்கள், தாய்க்குரிய அன்புடன் இருந்து அனைவரையும் அரவணைப்பார்கள். கடக ராசி பெண்கள் திருமண பந்தத்திற்கு மிகச் சிறந்தவர்கள். ஆயுள் முழுவதும் தன்னை பாதுகாத்து, பக்கபலமாய் நிற்கும் ஆண்மகனையே விரும்புவார்கள். பிறவி காலம் முடியும் வரை கைப்பிடித்த மணாளனை கைவிடமாட்டார்கள்.

சிம்மம் :

சூரியனால் ஆட்சி செய்யப்படும் ராசி தான் சிம்மம். பிறரை ஈர்ப்பதே சிம்ம ராசிக்காரர்களின் தனிச்சிறப்பு. இலட்சியவாதியான படைப்புத் திறன் அதிகமாக இருக்கும். குறிப்பாக கோபக்கார ஆண்களுக்கு ஏற்ற சிறந்த துணை சிம்ம ராசி பெண்கள் தான். குழந்தைத்தனம் கொண்ட இவர்கள் குடும்பத்தில் ஏற்படும் எத்தகைய சிக்கலான பிரச்சனைகளையும் எளிதில் சிறந்த முறையில் கையாளும் திறன் கொண்டவர்கள்.