இலங்கையில் அதிகரித்தது வாகன உதிரிப்பாகங்களின் விலைகள்

பெருமளவில் அதிகரித்துக் காணப்பட்ட வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவுக்குக் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் விலைகள் தற்போது ஒரு நிலையான மட்டத்தில் இருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே கூறியுள்ளார்.

வாகனங்களின் விலைகள் குறைந்தாலும் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளதுடன், இது சம்பந்தமாக நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடும் கிடைத்துள்ளது.

அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில், வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளது எனவும் இந்திக சம்பத் மெரெஞ்சிகே குறிப்பிட்டுள்ளார்.