உணவுகளை சூடாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்

சிலருக்கு எப்போதும் உணவுகளை சூடாக சாப்பிட தான் பிடிக்கும். குறிப்பாக சிலருக்கு ஆவி பறக்க சாப்பாடு இருந்தால் தான் முழுமையாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். ஆனால் மிதமான சூட்டில் சாப்பிட்டால் மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கொதிக்க கொதிக்க சாப்பாட்டை சாப்பிடுவதால் உணவு பாதையில் உள்ள மியூகோசா படலம் பாதிக்க வாய்ப்புள்ளது. மியூகோசா படலம்தான் நாம் சாப்பிடும் உணவுகளை எளிதாக குடலுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. சரி வாங்க சூடாக சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் சிக்கலைகள் குறித்து பார்க்கலாம்..

தீமைகள்:-

  • மிதமான சூட்டில் உணவுகளை சாப்பிடுவதே நல்லது. கொதிக்க கொதிக்க உணவுகளை உள்ளே தள்ளினால் உணவுப் பாதையில் பாதிப்படையும். உணவுப்பாதையின் உணவுக்குழல் ஆரம்பித்து குடல் வரை இருக்கிறது மியூகோசா படலம்.இது பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது.
  • இந்நிலையில் சூடான உணவுகளை சாப்பிடுவதால் அதை பாதிப்படையச் செய்வதால் எளிதில் அல்சர் வர வாய்ப்புண்டு. ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் அதுவே எதிர்காலத்தில் புற்று நோயாகவும் மாறலாம்.

  • சூடான உணவுகள் சாப்பிட்டால் செரிமானத்துக்கான படி நிலையிலும் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. வாயிலும் வயிற்றிலும் புண்களை வரவழைக்கும். குளிர்காலத்தில் உடல்நலம் சரி இல்லாமல் இருக்கும் போது சுடுதண்ணீர் தான் குடிக்க வேண்டியிருக்கும்.
  • அவ்வாறு குடிக்கும் அளவுக்கு நன்றாக ஆற்றி சூடு ஆறியவுடன் மட்டுமே குடிக்கவேண்டும். அதுபோல உணவை தட்டில் கொட்டி சற்று ஆறியவுடன் சாப்பிடுவதே சிறந்தது. காபி அதிகமாக குடிப்பவர்களுக்கும் மியூகோசா படலம் பாதிப்படையும் என்று கூறப்பட்டுள்ளது.