தலஹேன பிரதேசத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி மின்னல் தாக்கி பரிதாபமாக பலி!

சீரற்ற வானிலை காரணமாக மின்னல் தாக்கி 6 வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் – ஆனமடுவ, தலஹேன பிரதேசத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேச செயலக பிரிவு ஆகியவற்றுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.