மற்றவர்கள் மீது உண்மையான அன்பை காட்டுபவர்கள் எந்த ராசிக்காரர்கள் தெரியுமா? வாங்க பார்க்கலாம்

அன்பு, அக்கறை இரண்டுமே அனைவருக்கும் வாழ்க்கையில் தேவையான ஒன்று. ஏனெனில் பணம் மட்டுமே ஒருவருக்கு வாழ்க்கையில் அனைத்தையும் தந்துவிடாது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மீது அக்கறை செலுத்த வேண்டுமென்றால் அது அம்மாவால் மட்டும்தான் முடியும். ஆனால் அதேபோல அக்கறையை சில நண்பர்களிடமும் நாம் உணரலாம்.

சிலருக்கு இயற்கையாகவே மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளும் சுபாவம் இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்கள் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் மீது உண்மையான அக்கறை செலுத்துவார்கள் என்று பார்க்கலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள். தங்களுக்கு பிடித்தவர்கள் மீது அக்கறை செலுத்துவது இவர்களுக்கு இரத்தத்திலேயே இருக்கும் குணமாகும். இவர்கள் உதவி தேவைப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக இவர்கள் அங்கு இருப்பார்கள். மற்றவர்களுக்கு உபயோககாரமாக உதவுவதும், அன்பு செலுத்துவதும் இவர்களுக்கு பிடித்தது மட்டுமல்ல இவர்கள் அதில் சிறந்தும் விளங்குவார்கள். மற்றவர்களை பற்றி அதிகம் யோசிப்பதால் எந்த வழிகளில் எல்லாம் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும். மற்றவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களின் தேவையை இவர்கள் உணர்வார்கள்.

மீனம்

இவர்கள் அனைத்து உயிரினங்களின் மீதும் அக்கறை செலுத்துபவராக இருப்பார்கள். எந்தவொரு ஜீவராசிக்கு பிரச்சினை என்றாலும் அங்கு அவர்களுக்கு உதவி புரிய இவர்கள் அங்கு இருப்பார்கள். தனது நலத்தை விட பிறரின் நலத்தை முக்கியமாக நினைப்பார்கள். இவர்களின் இரக்கத்தாலும், உதவி செய்யும் குணத்தாலும் சுற்றியிருப்பவர்கள் அதிக பலனை அடைவார்கள். இவர்கள் தன் மீதும் கொஞ்சம் அக்கறை செலுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மற்றவர்களுடன் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தி கொள்வதே இவர்களை மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக மாற்றுகிறது. தனக்கு வேண்டியவர்களுக்கு இவர்கள் எப்பொழுதும் உண்மையாகவும்,நேர்மையாகவும் இருப்பார்கள். இதனாலேயே இவர்கள் தங்களுடன் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இவர்கள் சிறந்த பெற்றோராக இருப்பார்கள், அதே குணம்தான் இவர்களின் நண்பர்கள் மீதும், உடன் பணிபுரிபவர்களின் மீதும் இவர்களுக்கு இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள். மற்றவர்களின் கனவை பின்பற்றவும், அதனை சாதிக்கவும் இவர்கள் ஆதரவு கொடுப்பதுடன் ஊக்கமளிக்கவும் செய்வார்கள். இவர்கள் மனதில் மலையளவு இருந்தாலும் அதனை அனைவருக்கும் பிரித்து கொடுப்பார்கள். மக்களை கவனித்து கொள்வதும் அவர்களுக்கு தேவையான அன்பு, இரக்கம், கவனிப்பு என அனைத்தையும் கொடுக்க முயலுவார்கள். உங்களின் மோசமான நேரங்களில் ஒரு துலாம் ராசிக்காரர் அருகில் இருந்தால் போதும்.