நாட்டில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் உள்ள சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் சிறுவர் இல்லங்களில் 12,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் இருந்ததாகவும் தற்போது 10,900 சிறுவர்கள் அனாதை இல்லங்களில் வாழ்ந்து வருவதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் சுதீர நிலங்க விதான(Sudira Nilanga Vidana) தெரிவித்துள்ளார்.

தேசிய மாற்றுப் பராமரிப்பு தேசியக் கொள்கையின் கீழ், குழந்தைகளைக் குடும்பத்தில் இருந்து பிரிக்காமல் பராமரிக்கும் செயற்திட்டத்தின் மூலம் குழந்தைப் பராமரிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

சுமார் 90 வீதமான சிறுவர்கள் நிதி நெருக்கடி காரணமாக அவர்களைக் கவனித்துக் கொள்ள முடியாமல் அனாதை இல்லங்களுக்குச் செல்வதாக சுதீர நிலங்க விதான மேலும் தெரிவித்தார்.