14 பேரின் உயிரை காவு கொண்ட சாரதி மாரடைப்பால் உயிரிழப்பு

பசறை – லுணகல வீதியின் 13ஆவது மைல் பகுதியில் கடந்த மார்ச் மாதம் விபத்திற்கு இலக்காகிய பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்டுள்ள மாரடைப்பு காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளாக தெரியவருகிறது.

திடீர் சுகயீனத்திற்கு இலக்காகிய அவர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கோவிட் தொடர்பான பரிசோதனைக்கு பின்னர் இறுதிச் சடங்குகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.