செம்பருத்தி பூவில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே

அழகு நிறைந்திருக்கும் செம்பருத்தி பூவில், மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் இலை, மொட்டு, வேர் போன்ற அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது. அது உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும், மலமிளக்கும், உறுப்புகயின் புண்களை ஆற்றும், காமத்தை பெருக்கும், வறட்சி அகற்றும், மாதவிடாயை சீராக்கும்.

 

இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த சுவைமிக்க ‘செம்பருத்தி பூ ஜூஸ்‘ தயார் செய்யும் முறை பிள்வருமாறு..

தேவையான பொருட்கள்

  • செம்பருத்தி பூ – 10
  • தண்ணீர் – 3 கப்
  • எலுமிச்சம் பழம் – 1
  • தேன் – தேவையான அளவு.

செய்முறை

  • பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி, அடுப்பை அணைத்து விடவும்.
  • செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின், வடிகட்டி எலுமிச்சம் பழ சாறு கலக்கவும்.
  • வண்ணமயமான ஆரஞ்சு நிறத்தில் கலவை மாறும். தேவையான தேன் கலக்கவும்.
  • சுவைமிக்க ‘செம்பருத்தி பூ ஜூஸ் தயார்.