கன்னட திரையுலகின் பிரபல நடிகர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மகன் தான் புனித் ராஜ்குமார். இவர் கன்னடத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர்.

இவருக்கு கன்னட சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்களை வெளியானால் அங்கு திருவிழா போல் காட்சியளிக்கும். இவரது நடனத்திற்கு ஏராளமான திரை பிரபலங்கள் ரசிகர்களாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி தனது 46 வது வயதில் உயிரிழந்துள்ளார்.

இதனால் தற்போது கன்னட திரை உலகமே சோகத்தில் உள்ளதுடன் , அவரது மறைவுக்கு  பல பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.