அடுத்தவர் மனதை காயப்படுத்த இந்த ராசிக்காரர்களால்தான் முடியுமாம்.! யார் அந்த ராசிக்காரர்? வாங்க பார்க்கலாம்

எப்பொழுதுமே கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது என்பது எவராலுமே முடியாத ஒன்றாகும். ஏனெனில் சூழ்நிலைகள் நமது மனநிலையை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்த மனநிலை மாற்றம் என்பது தற்காலிகமானதாக இருக்க வேண்டும். மனநிலை நமது சூழ்நிலை மீது அதிகாரம் செலுத்தும் போது அது நமக்கு சிடுமூஞ்சி, மந்தமானவர் போன்ற பெயர்களை பெற்றுத்தரும்.

இந்த பிரச்சினை உள்ளவர்கள் ஒன்று செயல்படாமலேயே இருப்பார்கள் அல்லது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுடன் இருப்பதை விட மோசமான அனுபவம் வேறொன்றும் இருக்க முடியாது. இவர்களின் மனநிலை மாற்றம் உறவுகளை அவமதிக்க தூண்டும். இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த பிரச்சினையுடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

துளியும் யோசிக்காமல் அடுத்தவர் மனதை காயப்படுத்த இந்த ராசிக்காரர்களால்தான் முடியும் தெரியுமா?

ரிஷபம்

உங்களுடைய மோசமான மனநிலையும், கடுமையாக நடந்து கொள்ளும் குணமும் மற்றவர்களை காயப்படுத்தும் என்று உங்களுக்கு தெரியாமல் இல்லை, சொல்லப்போனால் உங்களுக்கு அதனை பற்றி எந்த கவலையும் இல்லை. அதுதான் உங்களின் பிறவிகுணம். உங்களின் உணர்ச்சிகளுக்கு நீங்கள் அடிமையானவர்கள் எனவே பல நேரங்களில் அதுதான் உங்களின் சூழ்நிலையையும், குணத்தையும் முடிவு செய்வதாக இருக்கும். இதனால்தான் நீங்கள் எப்பொழுதும் சிடுமூஞ்சியாக அனைவருக்கும் காட்சியளிக்கிறீர்கள். உங்களின் செயல்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்போ அல்லது அவர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையோ உங்களுக்கு துளியும் இருக்காது.

மிதுனம்


இவர்கள் தங்களின் மோசமான மனநிலையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்த கூடியவர்கள், இவர்களை நினைத்து இவர்களே பரிதாபப்பட்டு கொள்ளுவார்கள். உங்களின் குணநலன்கள் மீது உங்களுக்கே கோபம் இருக்கும், மனதில் ஏற்பட்ட காயத்தை நினைத்து நினைத்து அதனை குணப்படுத்த விடாமல் நீங்களே தடுப்பீர்கள். நீங்கள் வெடித்து சிதற காரணம் உங்களுக்குள் இருக்கும் பல தோல்விகள்தான். உங்களின் தோல்விகள் உங்கள் செயல்களில் பிரதிபலிக்கும். ஒன்று நீங்கள் எப்பொழுதும் அழும் மனநிலையில் இருப்பீர்கள் அல்லது மற்றவர்களிடம் எரிந்து விழும் மனநிலையில் இருப்பீர்கள்.

கன்னி

செயலற்று இருப்பதும், ஆக்ரோஷமாக செயல்படுவதும் இவர்களுக்கு வேறு அர்த்தத்தை கொடுக்கும். கன்னி ராசிகளில் பிறந்தவர்கள் தனது சூழ்நிலையை எப்படி மாற்ற வேண்டும் என்றார் நன்கு அறிந்தவர்கள். புலம்புவது, சலித்து கொள்வது, எரிந்து விழுவது போன்ற செயல்களின் மூலம் தனக்கு அந்த சூழ்நிலை பிடிக்கவில்லை என்று உணர்த்துவார்கள். நீங்கள் மகிழ்ச்சியா இருக்கும்போது அதற்கு காரணம் மற்றவர்கள்தான் என்று நினைப்பீர்கள், அதுவே நீங்கள் விரும்பியது மற்றவர்களிடம் இருந்து கிடைக்காத போது அவர்கள் உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பது போல நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும், இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மேஷம்

நல்லதோ, கெட்டதா அல்லது நடுநிலையானதோ எதுவாக இருந்தாலும் அதில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பீர்கள், இதனால் உங்கள் மனநிலை ஆக்ரோஷமானதாக மாறிவிடுகிறது. நீங்கள் மற்றவர்களால் சரியாக கவனிக்க படவில்லை என்று நினைத்தால் உங்களின் மனநிலை மிகவும் இருக்கமானதாக மாறிவிடும். மோசமான மனநிலையில் இருக்கும் போது நீங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டீர்கள், மாறாக உங்கள் மனதில் படுவதையெல்லாம் பேசிவிடுவீர்கள். அதன் பலன் என்ன, விளைவுகள் என்ன என்பதை பற்றிய கவலையே உங்களுக்கு இருக்காது. கெட்ட மனநிலையில் உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் நீங்கள் செய்வீர்கள்.

துலாம்

பொய் பேசுவதில் வல்லவர்களான துலாம் ராசிக்காரர்களின் சிறப்பே இவர்கள் சாதாரணமாகவும், சமநிலையான மனதுடனும் இருப்பதாக மற்றவர்களை நம்ப வைப்பதுதான். ஆனால் மோசமான மனநிலையில் இருக்கும்போது மற்றவர்களை காயப்படுத்துவதில் இவர்களுக்குத்தான் முதல் பரிசு தரவேண்டும். மோசமான மனநிலைக்கு சென்றுவிட்டால் சற்றும் தாமதிக்கமால் அனைவரையும் மூர்க்கத்தனமாக கஷ்டபடுத்த தொடங்கி விடுவார்கள். மற்றவர்களிடம் சென்று இவர்கள் தங்கள் கோபத்தை சொல்லி காட்ட வேண்டிய அவசியமில்லை, போகிற போக்கில் அனைவரையும் கஷ்டப்படுத்தி விட்டு சென்றுவிடுவார்கள்.