தடை செய்யப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட கைதிகள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் சிம் அட்டை மற்றும் புகையிலை அடங்கிய பொதியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு கைதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரின் சட்டையின் இடது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிம் அட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் , கொழும்பு 05 பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய சந்தேகநபரின் ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு புகையிலை துண்டுகளும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.