கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதேவேளை, குறித்த 23 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளபோதும் நிறுவன செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.