மோட்டார் சைக்கிள் ஒன்று, டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் 28 வயது இளைஞன் பலி!

மோட்டார் சைக்கிள் ஒன்று, டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் புத்தளம் – மன்னார் வீதி, பஸ்பராபத் சந்தியில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் இன்று (27) தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான புத்தளம், வேப்படுமவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருடன் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த 70 வயது வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.