மீண்டும் அதிகரிக்கிறதா சீமெந்தின் விலை?

உலக சந்தையில் சீமெந்து விலை அதிகரிப்பின் காரணமாக உள்நாட்டிலும் அதன் விலை உயர அதிக வாய்ப்புள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் ரத்து செய்துள்ளமையும் சீமெந்து விலை உயர்வுக்கான சாத்திய கூறுகளாக பார்க்கப்படுகிறது. அதன் படி தற்போது சீமெந்து 50 கிலோ மூடையானது 98 ரூபாவினால் விலையுயர்ந்து 1098 ரூபாவாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சீமெந்து இறக்குமதியின்போது ஒரு மூடைகக 1300 ரூபா வரை செலவிடும் நிலைமை இருப்பதால் எதிர்வரும் தினங்களிலும் அதன் விலையை உயர்த்த கலந்தாலோசிக்கப்ட்டு வருவதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.