பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்! இவரைக் கண்டு பிடித்தால் 25 லட்சம் ரூபாய்

மீகஹாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கண்டு பிடிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் பொது மக்களின் உதவியைக் நாடியுள்ளது.

நேற்று  முன்தினம் (25) செவ்வாய்கிழமை காலை 6.15 மணியளவில் முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பிரிதொரு நபர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு வந்த சந்தேகநபர்கள் முழுமையாக முகக்கவசத்தை அணிந்திருந்ததோடு, மோட்டார் சைக்கிளில் வந்து வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டு பிடிப்பதற்காக பொலிஸாரால் பொது மக்களின் உதவியைக் கோருகின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு 25 இலட்சம் ரூபா சன்மானம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. அத்தோடு வழங்கப்படும் தகவல் குறித்த இரகசிய தன்மை பேணப்படும் என தெரிவித்தனர்.

இதேவேளை தேடப்பட்டு வரும் சந்தேக நபருடைய பெயர் பொன்னம்பெரும ஆராச்சிகே தொன் தனுஷ் புத்திக என்பதாகும். இவர் 30 வயதுடையவராவார் தேசிய அடையாள அட்டை இலக்கம் 911854481v என்பதாகும்.

மேலும் இவர் தங்கியிருந்த வீட்டின் முகவரிகள், இல 42/02, பாரொன் திலகாந்த மாவத்தை, முல்லேரியா மற்றும் இல 333 சீ, ரொபட் குணவர்தன மாவத்தை, மாலம்பே. (மனைவியின் முகவரி) மற்றும் இல 252 , உடுமுல்ல, முல்லேரியா என்பவையாகும். அங்கொடை, ஹிட்புட்டான, முல்லேரியா, வெலிகம, மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த சந்தேகநபர் அதிகளவில் நடமாடுவார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று WP XV 5432 என்ற இலக்க தகடுடைய மோட்டார் சைக்கிளிலேயே சந்தேகநபர் வருகை தந்துள்ளார். 071-8591727 , 077-7370360 மற்றும் 071-8592279 என்ற இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.