நாம் உடுத்தும் ஆடைகளில் உயிர்வாழுமா கொரோனா வைரஸ்..? ஆய்வாளர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!

நீங்கள் உடுத்தும் ஆடைகளில் கொரோனா வைரஸ் உயிர் வாழுமா? அப்படி எத்தனை நேரம் கொரோனா வைரஸ் உயிர் வாழும்? இந்த கேள்விக்கான பதில் துணிகளில் கொரோனா உயிர்வாழும் வாய்ப்புகள் உண்டுதான்.. ஆனால் எத்தனை காலம் என்பதற்கு விடை இல்லை. தெளிவான ஆய்வு முடிவுகளும் இல்லை.வைரஸ்களைப் பொறுத்தவரை மென்மையான மேற்பரப்புகளை விட சற்று கடினமாக இருக்கக் கூடிய மேற்பரப்புகளில்தான் உயிர்வாழ அதிக வாய்ப்புகள்.இதனை வைத்துதான் பிளாஸ்டிக், ஸ்டீல், மரப் பொருட்கள்/ கார்ட்போர்டு உள்ளிட்டவற்றில் எவ்வளவு காலத்துக்கு கொரோனா வைரஸ் உயிர் வாழும் என்கிற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.ஸ்டீல், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்கள் 3 நாட்கள் வரை உயிர் வாழுமாம்.

மர கார்ட்போர்டில் 3 மணிநேரமும் காப்பரில் (தாமிர பொருட்கள்) 4 மணிநேரமும் உயிர் வாழும் கொரோனா வைரஸ். ஆனால் காற்றில் 3 மணிநேரம்தான் உயிர் வாழுமாம்.துணிகள் நுண்ணிய இடைவெளி கொண்டவை. இவற்றின் இடுக்குகளில் கொரோனா வைரஸ் தங்க வாய்ப்புகள் அதிகம். துணிகளை துவைக்க பயன்படுத்தப்படும் சோப்புகள் இத்தகைய வைரஸ்களை அழிக்கும் திறன் கொண்டவை.இருப்பினும் துணிகளில் கொரோனா வைரஸ் கிருமிகள் தங்குமா? அவை எவ்வளவு காலத்துக்கு துணிகளில் தங்கும் என்பதற்கான துல்லியமான விடைகள் இதுவரை கிடைக்கவும் இல்லை. ஆனாலும் துணிகள் தொடர்பாக மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்பது விஞ்ஞான உலகத்தின் அறிவுறுத்தல்.நாம் அவ்வப்போது வெளியே செல்லும் போது அணிந்திருக்கும் ஆடைகளை உடனே துவைக்கவில்லை என்றாலும், வெயிலில் போடுவது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகின்றது.