இத்தாலியில் நடந்த கொடூர சம்பவம்! தலைமறைவான இலங்கைப் பெண்

இத்தாலியில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

 

சசித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே (33) என்பவரே தலைமறைவாகியுள்ளார். அவரது சபாடி (11), சந்தனி (3) என்ற பெண் குழந்தைகளே கொல்லப்பட்டனர். போர்டோ சான் பாங்க்ராஸியோ மாவட்டத்தில் உள்ள வெரோனா பாதுகாப்பு குடியிருப்பில் கடந்த ஜனவரி மாதம் முத்த சசித்ரா வசித்து வருகிறார். வெனிஸ் சிறார் நீதிபதியின் ஆணையின்படி அவர்களின் தந்தையைவிட்டு குழந்தைகள் பிரிந்து அரச குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

 

நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர்கள் வசித்து வந்த அறையை விட்டு யாரு வெளியேறாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் பராமரிப்பாளர் அறைக்குள் நுழைந்தபோது சிறுமிகள் படுக்கையில் உறங்குவது போல இருந்துள்ளது.

ஆனால் அவர்கள் மூச்சு விடவில்லை என்பதை அறிந்த பராமரிப்பாளர் அவசர உதவி மையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சமத்துவ இடத்திற்கு வந்த பிரேத பரிசோதனை அதிகாரிகள் முதற்கட்ட கண்டுபிடிப்பின்படி சிறுமிகள் காலை 9 மணிக்கு சற்று முன்னதாகவே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகள் இருவரும் மூச்சு திணற வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தலைமறைவான தாயை தேடும் பணியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தேடி வருகின்றனர்.