அமெரிக்கா செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

அமெரிக்கா செல்லும் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்றும், அதன் பின்னரே பயணிகள், நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்குள் வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறைகளால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றிருப்பதும் அவசியமாகும்.

18 வயதுக்கு கீழான சிறுவர்கள் தடுப்பூசி பெறும் கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டபோதும் பயணத்திற்கு மூன்று நாட்களுக்குள் நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் சோதனை முடிவை காட்ட வேண்டும்.

புதிய நடைமுறை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறையில் உள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.