பிறருக்காக தியாகம் செய்யும் குணம் கொண்டவர்கள் எந்த ராசிக்காரர் தெரியுமா?

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் எண்ணமாகும். அதற்கான முயற்சிகளிலும் அனைவரும் ஈடுபடுகிறோம். ஆனால் சுயநலமாக சிந்திப்பதும் தன்னலத்திற்கான செயல்களை செய்வதும் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான எளிய வழி என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறர்கள்.

 

உண்மையில் விட்டு கொடுத்து வாழ்வது சுயநலமாய் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருப்பதற்கான எளிய வழி என்பதை பலரும் அறிவதில்லை. மற்றவர்களுக்காக விட்டு கொடுப்பதோ அல்லது தியாகம் செய்வதோ பெரும்பாலும் முட்டாள்தனம் என்றுதான் அழைக்கப்படுகிறது. இந்த விட்டு கொடுக்கும் குணம் சிலருக்கு அவர்களின் பிறந்த ராசி மூலம் பிறவியில் இருந்தே வரும். இந்தப் பதிவில் எந்தெந்த ராசிகள் அதிகம் விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் பிறருக்காக விட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவ்வாறு செய்யும்போது தனக்கான அங்கீகாரம் கிடைக்காத போது அது அவர்களுக்குள் சிக்கலான மனநிலையை உண்டாக்கும். இந்த மனநிலை அவர்களுக்குள் அதிகரிக்கும் போது அது அவர்களுக்குள் தன்னை தவிர மற்ற அனைவரும் சுயநலவாதிகள் என்ற எண்ணம் வளரும். மற்றவர்களுக்கு தங்கள் ஆற்றலை வழங்குவதன் மூலம் தான் எதையும் இழக்கப்போவதில்லை என்ற எண்ணம் இவர்களுக்குள் இருக்கும். சிந்தனையற்ற, உணர்ச்சிகளற்றவர்களுடன் பழகுவது தங்களின் துரதிர்ஷ்டம் என்று கருதுவார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் அதிக உணர்ச்சிகள் உடையவர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் வெடித்து சிதறும் சூழ்நிலை வரை பொறுமையை கடைபிடிப்பார்கள். அவர்கள் தங்கள் பணம், நேரம், ஆற்றல் என அனைத்தையும் மற்றவர்களுக்காக செலவிடும் போது அதற்கான பாராட்டை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் ஏன் மற்றவர்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்களுடன் இருப்பவர்கள் இவர்களை பாராட்டினாலே போதும் இவர்கள் விட்டுக்கொடுத்து கொண்டேதான் இருப்பார்கள்.

மீனம்

ஏதாவது கெட்ட விஷயங்கள் நடக்கும்போது இவர்கள் அது தனது தவறல்ல தான் உதவி செய்யத்தான் முயன்றேன் என்று கூறுபவர்களாக இருப்பார்கள். தவறு செய்தவர்களுக்கு இவர்கள் எப்பொழுதும் மறுவாய்ப்பை கொடுக்க தயங்க மாட்டார்கள். இவர்கள் எதனையும் தங்களுக்கு சொந்தாமாக நினைத்து கொள்வதில்லை, அதனால தங்களுக்கு எதுவும் நல்லது நடக்கப்போவதில்லை என்று நம்புகிறவர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களின் பிரச்சினையே நம்பிக்கை தொடர்பானதுதான். ஏனெனில் இவர்கள் ஒருவரை நம்பியதால் ஏற்கனவே காயம் பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் அதனை செய்ய தயங்குவார்கள். அதனால் அவர்கள் அதற்கு பின் அனைவரின் உள்நோக்கங்களையும் சந்தேகிப்பார்கள், இதனால் அவர்கள் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள். இவர்களின் விட்டுக்கொடுக்கும் குணத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது எப்பொழுது தனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டால் அவர்கள் அதை செய்வதை நிறுத்தி விடுவார்கள். அவர்களால் அதுவரை பயனடைந்தவர்கள் அதன்பின் அவர்களை தூற்ற தொடங்கி விடுவார்கள்.