விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் 4 பேர் கைது!

விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காலி, எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏன்கந்துர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், உள்நாட்டுத் துப்பாக்கியுடன் கனேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, பொரளை, மகசின் வீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு, சமகிபுர சந்திக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 20 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 02 கிலோகராம் 02 கிராம் கேரள கஞ்சாடவுன் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் பயணித்த லொறியொன்றை வழிமறித்துச் சோதனையிட்டபோதே கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.