பைஸர் தடுப்பூசி தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி

இலங்கையில் சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோருக்கும் பைஸர் பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டவர்களுக்கு பைஸர் பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்ட பிறகு, சுற்றுலாத்துறையினருக்கு வழங்கப்பட உள்ளது.

வருட இறுதியில் பல சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.