எரிபொருள் விலை தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது என இணை அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான டொக்டர் ரமேஷ் பத்திரன(Dr. Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை எரிபொருள் விலையை நிர்ணயம் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

உலகில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் நட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.