தினமும் தண்ணீரில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்

உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு பல வித ஆரோக்கியங்கள் கிடைக்கின்றது. முக்கியமாக இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் உள்ளதால் தேவைக்கு அதிகமாகவே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.

இயற்கையாகவே இனிப்பு மற்றும் கலோரிகள் அதிகம் கொண்ட திராட்சை, அளவாக சாப்பிடும் போது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இது போன்ற பல அற்புதங்களை கொண்ட திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால்  கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

நன்மைகள்:-

  • ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ள திராட்சையில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி உள்ளன. அவை இரத்த சோகையை குணப்படுத்தும். மேலும் திராட்சையில் உள்ள சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.

  • திராட்சையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் குடல் இயக்கத்தை சீராக்க உதவும். இது சிறந்த செரிமான அமைப்பை ஏற்படுத்தும்.
  • திராட்சையில் பொட்டாசியம் அதிகளவு நிறைந்துள்ளது, இது உங்கள் உடலில் உள்ள உப்பின் அளவை சமநிலைப்படுத்தி இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
  • எலும்பு உருவாவதற்கு போரோன் மிகவும் முக்கியமானது. இது திராட்சையில் அதிக அளவில் உள்ளது. அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளன. தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிடுவது எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
  • திராட்சையில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது.
  • திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சி நிறைந்துள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் காய்ச்சல், தொற்று மற்றும் பல வகையான நோய்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுகின்றன.