பிறந்த மாதத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் வரும்னு கண்டுபிடிச்சிடலாம்! வாங்க என்னவென்று பார்ப்போம்

நம் எல்லோருக்கு மற்ற நாட்களை விட நமது பிறந்த நாள் மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கும். பிறந்த நாள் என்றாலே யாருக்கு தான் மகிழ்ச்சியாக இருக்காது. ஒவ்வொரு நிமிடத்தையும் இனிமையாக நாம் எண்ணி கொண்டாடுவோம். இந்த பிறந்த நாள் மாதங்களை வைத்து ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை கூட கணிக்க முடியுமாம்.

அதே போன்று அவருக்கு எப்படிப்பட்ட நோய்கள் வரும் என்பதையும் எளிதாக சொல்ல முடியுமாம். வாங்க, உங்க பிறந்த மாதம் உங்களை பற்றியும் உங்கள் ஆரோக்கியத்தை பற்றியும் என்ன சொல்கிறதுனு பார்ப்போம்.

மாதம் 12..!
நாம் பிறந்த மாதம் தான் நமக்கு அதிகமாக பிடித்த மாதமாகும். மேலும், நமக்கு பிடித்தமானவர்கள் பிறந்த மாதம் நாம் பிறந்த மாதத்தை விட ரொம்ப பிடிக்கும். இந்த பதிவில் ஒவ்வொரு மாதத்திற்கான சிறப்பம்சமும், அந்த குறிப்பிட்ட மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு ஏற்படுகின்ற உடல் பாதிப்புகளும் குறிப்பிடப்பட உள்ளது.

ஜனவரி
மாதத்தின் முதல் மாதம் ஜனவரி தான். இந்த மாதத்தில் பிறந்தவர் ஆண்களுக்கு ஒரு சில முக்கியமான நோய்கள் வர கூடும். குறிப்பாக மலச்சிக்கல், அல்சர், குடல் சார்ந்த நோய்கள் இவர்களுக்கு ஏற்பட கூடும். மேலும், தைராய்டு போன்ற பிரச்சினைகளும் இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு ஏற்பட கூடும்.

பிப்ரவரி
“காதல் மாதம்” என்று அழைக்கப்படும் இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் வர கூடும். மேலும், மாரடைப்பு, அடிக்கடி நெஞ்சு வலி போன்றவையும் ஏற்படும். ஒரு சில ஆண்களுக்கு கீல்வாதம், தைராய்டு போன்ற பிரச்சினைகளும் உண்டாக கூடும்.

மார்ச்
மூன்றாம் மதமான இந்த மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள், எப்போதும் நல்ல மகிழ்ச்சியான மனதுடனே இருப்பார்கள். பெரும்பாலும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நல்லெண்ணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களுக்கு ஆஸ்துமா, கண் பார்வை குறைபாடு, இதய கோளாறுகள் ஏற்பட கூடும்.

ஏப்ரல்
“பிறரை முட்டாள்களாக ஆக்கும்” இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு எலும்பு சார்ந்த பிரச்சினை ஏற்பட கூடும். இவர்களுக்கு ஆஸ்துமா, ஹார்மோன்கள் குறைபாடும் உருவாகலாம். ஒரு சில ஆண்களுக்கு கட்டிகள் போன்றவையும் ஏற்பட கூடும்.

மே
இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் மன அழுத்தம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சர்க்கரை நோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட கூடும். மேலும், இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் மன அழுத்தத்தை குறைக்க சத்தான உணவுகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழித்தால் இதை போக்கி விடலாம்.

ஜூன்
கோடை கால மாதமான இந்த ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் இந்த உலகை நேர்மறையான(positive) கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். இவர்களின் மனம் அடிக்கடி தாவி கொண்டே இருக்கும். அதாவது, நிலையான பார்வை இவர்களுக்கு இருக்காதாம். மேலும், இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு சுவாச கோளாறுகள், இதய நோய்கள், கண் புரை நோய்கள் வரும்.

ஜூலை
ஏழாவது மாதமான இந்த ஜுலை மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு வேறு சில உடல் கோளாறுகள் ஏற்படுகிறது. ஆஸ்துமா, கீல்வாதம், கட்டிகள் போன்றவை வரலாம். மேலும், இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட காலமாக கழுத்து வலி இருக்க கூடும்.

ஆகஸ்ட்
இந்தியர்களின் புரட்சிகரமான மாதமாக கருதப்படும் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு, ஒரு சில குறிப்பிட்ட நோய்கள் வர கூடும். இவர்களுக்கு எலும்பு பிரச்சினை, தைராய்டு குறைபாடு, ஆஸ்துமா போன்றவை வரும்.

செப்டம்பர்
இது கொஞ்சம் சற்றே வித்தியாசமான மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வரும். இவர்களுக்கு வர கூடிய நோய்கள் நீண்ட நாட்கள் இவர்களுக்கு இருந்து கொண்டு, பிறகு தான் குணமாகும். மன அழுத்தம், தைராயிட், எலும்பு தேய்மானம் ஆகியவை வரலாம்.

அக்டோபர்
அடிக்கடி தலை வலி, ரத்த சோகை, போன்றவை இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு ஏற்பட கூடும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிக கொழுப்புகள் கொண்ட உணவை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும். மேலும், இவர்களுக்கு பெரும்பாலும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு நீண்ட நாட்களாக தோல் பிரச்சினை இருக்க கூடும். குறிப்பாக அரிப்பு, சொறி, சரும பிரச்சினை ஏற்படாமல். அத்துடன் மாரடைப்பு போன்றவையும் இவர்களுக்கு வர கூடும்.

 

டிசம்பர்
கடைசி மாதமான இந்த டிசம்பர் மாதத்தின் ஆண்களுக்கு, கண் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். இவர்கள் அதிக மன அழுத்தம் கொண்டவராக இருப்பார்கள். எனவே, இதய பலவீனம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த 12 மாதத்தில் உங்கள் மாதம் எதுவென்று அறிந்து, நோய்களை வருமுன் காத்து கொள்ளுங்கள் நண்பர்களே.