காதலில் அதிகம் சொதப்பும் ராசிக்காரர் யார் தெரியுமா?

காதல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு உணர்வாகும்.மனிதர்களை மனிதர்களாய் வாழ வைக்கும் முக்கியமான குணங்களில் காதல் ஒன்றாகும். இந்த உலகில் நடக்கும் அனைத்து நல்லதுக்கும், கெட்டதுக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு காதல் இருக்கும். காதலில் சிறந்து விளங்குபவர்கள் ஆண்களா, பெண்களா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கண்டறியப்படவில்லை.

காதலின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் காதல் முறிவுக்கு காதலர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியும். குறிப்பாக ஆண்களின் சில குணங்களும், செயல்பாடுகளும்தான் அதிகமான காதல் முறிவுகளுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இயற்கையாகவே ஆண்கள் கொஞ்சம் சொதப்பல் பேர்வழிகள்தான், அதிலும் காதலில் கொஞ்சம் அதிகமாகவே சொதப்புவார்கள். இந்த பதிவில் காதலில் அதிகம் சொதப்பும் ஆண் ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மீனம்


மற்ற அனைத்து ராசி ஆண்களை விடவும் மீன ராசி ஆண்கள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு முற்றிலுமாக எதிர்மறையாக இருப்பவர்கள் மீது இவர்கள் எளிதில் ஈர்ப்பு கொள்வார்கள். இதனால் அவர்கள் உறவில் பல பிரச்சினைகளும், சிக்கல்களும் ஏற்படும், சிறிய விஷயங்களுக்கு கூட அதிகம் காயப்படும் இவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்வது இவர்களின் துணைக்கு மிகவும் கடினமாகும். சரியான துணை மட்டும் அமைந்து விட்டால் இவர்கள் காதலில் சிறந்து விளங்குவார்கள் ஆனால் இவர்கள் எப்பொழுதும் தனி உலகத்தில் வால்பவர்கள் ஆவர். நல்ல மனதும், நல்ல நோக்கமும் கொண்டிருந்தாலும் இவர்கள் பெரும்பாலும் தவறான நபர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்

இவர்கள் காதல் செய்வதற்கே அதிகம் சிந்திப்பார்கள். இவர்களுக்கு எப்பொழுதும் தங்களுடைய எதிர்காலமும், குடும்பமும்தான் முக்கியம். காதல் எப்பொழுதும் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பட்டியலில் சேராது. ஒருவேளை நீங்கள் ரிஷப ராசி ஆணை காதலித்தால் அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. அனைத்து விதத்திலும் தனக்கு இவர்கள் ஒத்துபோவார்கள் என்று தெரியும்வரை இவர்கள் உறுதியாய் எதையும் கூறமாட்டார்கள். இவர்களுடன் பழகும் எந்த பெண்ணிற்கும் விரைவில் இவர்கள் மேல் வெறுப்பு வந்துவிடும்.

மகரம்

மகர ராசி ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்திலும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். அதில் காதலும் அடங்கும். தாங்கள் விரும்புபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பணிசார்ந்த வாழ்க்கையிலும் சரி இவர்கள் அதிக அழுத்தத்தை செலுத்துவார்கள். முடிவெடுக்கும் உரிமையும், சூழ்நிலையை தீர்மானிக்கும் உரிமையும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களை கட்டுப்படுத்த நினைக்கும் இவர்களின் மூர்கத்தமான குணம் இவர்களை யாரையும் காதலிக்க விடாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு காதல் அமைவதும், காதல் செய்வதும் மிகவும் கடினமான ஒன்று, ஏனெனில் இவர்களின் மோசமான எதிரி இவர்கள்தான். இவர்கள் எப்பொழுதும் சரியான நேரத்தில் முடிவெடுக்க மாட்டார்கள் தாமதமாகவே எடுப்பார்கள். ஒருவரை பிடித்திருந்தால் அவர்களை கவர என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள்ளாகவே வேறு யாராவது அவரை கவர்ந்து விடுவார். காதலில் இவர்கள் எப்பொழுதும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள், ஆனால் இவர்களுக்கு காதல் அமைவதே கடினம்தான்.

கும்பம்

மற்ற ராசி ஆண்களை விட கும்ப ராசி ஆண்கள் மிகவும் வேடிக்கையானவர்கள். தங்கள் உலகத்தில் தனியாக வாழ்வதையே இவர்கள் அதிக விரும்புவார்கள். இவர்கள் சிறந்த காதலராக இருக்க முடியாது அதற்கு காரணம் இவர்கள் யாருடனும் ஒத்துப்போக மாட்டார்கள். ஆனால் இவர்கள் அதற்காக மிகவும் சிரத்தையெடுத்து முயற்சி செய்வார்கள். இவர்களை காதலிப்பவர்கள் எப்பொழுதும் முதல் அடியை அவர்கள்தான் எடுத்து வைக்கவேண்டும். ஏனெனில் இவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். இவர்கள் தானாக முடிவெடுக்கா விட்டாலும் தங்கள் துணை செல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு செய்வார்கள்.