கொழும்பு மக்களால் வரப்போகும் ஆபத்து

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாலை வேளைகளைல் கொழும்பு கல்கிஸ்ஸ கடற்கரையில் பெருமளவு மக்கள் குவித்துள்ளதுடன் அவர்களில் பலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கடற்கரையில் குவிந்த மக்களில் அதிகமானோர் முகக் கவசம் அணியாமல் இருந்ததுடன் சமூக இடைவெளியையும் பின்பற்றாது கடற்கரையில் நேரம் செலவிடுவதனை காண முடிந்துள்ளது.

இதேவேளை கல்கிஸ்ஸ கடற்கரையில் அதிகமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காணப்படுகின்ற நிலையில் தற்பொழுது அதிகமாக உள்நாட்டு பயணிகளே காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்படும் சுற்றுலா பயணிகளால் மற்றுமொரு கொவிட் அலை உருவாகும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.