முல்லைத்தீவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் இளைஞரொருவரை இன்று மல்லாவி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மல்லாவி – மங்கை குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரொருவர் 15 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமியினை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளைய தினம் (25.10.21) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் அல்லது பிள்ளைகளின் பாதுகாவலர்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.