நாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் !

கொவிட் தொற்றினால் மூடப்பட்டுள்ள பாடசாலகளின் ஆரம்ப பிரிவு நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாளையதினம் பாடசாலை செல்லும் மாணவர்கள் சீருடை அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா (Kapila Perera) அறிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் மக்களது நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அதற்கமைய ஆரம்ப பிரிவு வகுப்பு மணவர்கள் தம்மிடம் இருக்கின்ற ஏதேனும் ஒரு ஆடையுடன் பாடசாலை செல்ல முடியும்.