யாழ்.மாநகரில் வியாபார நடவடிக்கைகள், மக்கள் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்..!

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாளை தொடக்கம் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் யாழ்.மாநகருக்குள் வியாபார நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய மேற்கொள்வதற்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ்.மாநகரசபை, சுகாதாரப் பிரிவினர், பொலிஸாரின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை துரிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.